தஞ்சாவூர்;
தஞ்சை தபால் கோட்டத்தில் தேசிய தபால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தஞ்சையை அடுத்த நடுக்காவேரி துணை தபால் அலுவலகத்திலும், கோட்டூர் துணை தபால் அலுவலகத்திலும் தபால் சமூக வளர்ச்சி விழா நேற்று கொண்டாடப்பட்டது. நடுக்காவேரி துணை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஆரவல்லி ராஜாராமன், தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி, உதவி தபால் கண்காணிப்பாளர்கள் உமாபதி, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோட்டூர் துணை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், தஞ்சை தலைமை தபால் நிலைய முதுநிலை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மன்னார்குடி தெற்கு உபகோட்ட தபால் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இந்திய தபால் துறையின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தபால் சேமிப்பு கணக்குகளும், ஆயுள் காப்பீடு திட்டங்களும் தொடங்கப்பட்டன.தஞ்சை கோட்ட அலுவலகத்தில் நிதி வலுவூட்டல் நாளையொட்டி தபால் சேமிப்பு பிரிவு சம்பந்தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.