தமிழக செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள்

வத்தலக்குண்டு பகுதியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தினத்தந்தி

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம், காளியம்மன் கோவில் பகுதி ஆகிய இடங்களில்  ஓ.பன்னீர்செல்வத்தை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆரின் பித்தன், அம்மாவின் பக்தன் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒற்றுமையே பலம், ஒற்றை தலைமை பலவீனம் என்ற வாசகங்களும் உள்ளன. இந்த போஸ்டர்களால் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்