தமிழக செய்திகள்

முதுகலை ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியீடு...!

முதுகலை ஆசிரியர் தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1 2020-21 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று 15.02.2022 வரை 4 நாள்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது பயன்பாட்டு ஐடி மற்றும் கடவுச் செல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகெள்வதற்கான தேதி அறிவிக்கப்படும்.

ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்குரிய தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்பட்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை