சென்னை,
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்வுத்துறை வாரியம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் காரணத்தால் இந்த தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.