தமிழக செய்திகள்

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

நெட் தேர்வை தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது, நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

- தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்க வேண்டும்.

- தொழில்முறை தேர்வுமுறையில் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்

- தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

- மிக முக்கியமாக, மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி