தமிழக செய்திகள்

இன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் தள்ளிவைப்பு - கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

இன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டங்களை தள்ளிவைக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி இயக்குனர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1998-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்), ஆகஸ்டு 15-ந்தேதி (சுதந்திர தினம்), அக்டோபர் 2-ந்தேதி (காந்தி ஜெயந்தி) ஆகிய நாட்களில் கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், இன்று (15-ந்தேதி) நடக்க வேண்டிய கிராமசபா கூட்டத்தை தள்ளிவைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, இன்று கிராமசபா கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து