தமிழக செய்திகள்

போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் ரத்து

வடகோவையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தினத்தந்தி

கோவை,

வடகோவை ரெயில் நிலைய தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரெயில் நாளைமறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக நாளைமறுநாள் போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் மெமு ரெயில் (எண் 66612), மற்றும் மேட்டுப்பாளையத் தில் இருந்து கோவைக்கு பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் மெமு ரெயில் (எண் 66615) ஆகிய 2 ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் அன்றைய தினம் ஆழப்புழாவில் இருந்து தன்பாத்திற்கு காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரெயில் (எண் 13352) கோவை ரெயில் நிலைய சந்திப்பிற்கு வராமல் போத்தனூர் ரெயில் நிலையத்தில் பகல் 12.17 மணிக்கு நின்று இருகூர் வழியாக செல்லும். எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்லும் ரெயில் (எண் 12678) கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராது. அதற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்தில் பகல் 12.47 மணிக்கு நின்று இருகூர் வழியாக செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்