தமிழக செய்திகள்

திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் மின்தடை

துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட நாட்களில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டியில் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின்நிலையத்தில் அலகு 4-க்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் தடை செய்யப்பட உள்ளது. அப்போது, திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஐ.ஆர்.என். பின்புறம், ராஜாஜிபுரம், ஸ்ரீநிகேதன் பள்ளி, எஸ்.வி.கோவில் தெரு, காந்திபுரம், கணபதி நகர், தேவி மீனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருத்தணி துணை மின்நிலையத்திற்குட்பட்ட சரஸ்வதி நகர், வள்ளியம்மாபுரம், வள்ளியம்மாபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் பெருமாள்தாங்கல் புதூர் ஆகிய இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து