தமிழக செய்திகள்

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

2 மாதங்களுக்கு பிறகு கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இரண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

கடந்த ஜூலை 24-ந் தேதி முதலாவது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அணு உலையில் பராமரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணியை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதலின்படி விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சுமார் 2 மாதங்கள் நடைபெற்ற பணி நிறைவடைந்து உள்ளது.

இதையடுத்து நேற்று பகல் 12.07 மணியளவில் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. தற்போது 120 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

2-வது அணு உலையில் தற்போது ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்