தமிழக செய்திகள்

வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

வட சென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் முதல் யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கசிவு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வட சென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 210 மெகாவாட் மின் உற்பத்தி இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்