தமிழக செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணு மின்நிலையத்தில் உள்ள 2-வது அணு உலையில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக முதல் அணு உலை குளிரூட்டு கருவி பழுதாகி இரண்டு ஆண்டுகள் மின் உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கி கிடக்கின்றது.

இந்நிலையில், அங்கு இயங்கி வந்த ஒரு அணு உலையிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் வெளி மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் அளவீட்டில் சிக்கல் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது என அணுமின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது