தமிழக செய்திகள்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி ‘திடீர்’ நிறுத்தம்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி ‘திடீர்’ நிறுத்தம்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதலாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12.10 மணிக்கு திடீரென டர்பனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.

டர்பனில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பழுது சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் வட்டாரம் தெரிவித்துள்ளது. 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு