தமிழக செய்திகள்

வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டர், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரித்துள்ளார்.