தமிழக செய்திகள்

மின் கட்டண உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மின் கட்டண உயர்வுக்கு முழு விலக்கு அளிக்க கோரி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்.

கருமத்தம்பட்டி,

கோவை திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி தொழிலே பிரதான தொழிலாக உள்ளது. இதனை சார்ந்தே பிற தொழில்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தால் தொழில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என அரசு மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகளிடம் உயர்த்திய மின் கட்டண உயர்விக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் சோமனூர் அருகே நடைபெற்றது.

அதில் விசைத்தறிக்கு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெறக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் கோவை திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி கூடங்களில் விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு