சென்னை,
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கெண்ட ஆளுநர், சக்திவாய்ந்த முதலமைச்சரே என்று உரையைத் தொடங்கினார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-''இன்று என்ன சாதித்தீர்களோ, அது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் சாத்தியமாகி உள்ளது.
அர்ப்பணிப்பு, கடின உழைப்பு எப்போதும் உங்களை உயர்த்தும். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கல்வி, சேவை, ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா இன்னும் போகவில்லை. புதுப்புது வகைகளில் வந்துகொண்டே இருக்கிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதால், வாழ்க்கை முறையை பாதுகாப்பானதாக வைத்துக்கொள்ள முடியும் என்றார்.