தமிழக செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் இன்று (ஏப்.25) தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற உள்ளது. மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வு, பள்ளிகளின் பரிந்துரையின்படி நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்