தமிழக செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி நிறைவு

தினத்தந்தி

தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை மற்றும் கிராம நிர்வாக பயிற்சி அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து மாநிலம் முழுவதும் 42 நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் நாமக்கல் மற்றும் திருச்செங்கேடு பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நில அளவை பயிற்சி ஏற்கனவே முடிந்ததை அடுத்து, கிராம நிர்வாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி, பெது சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, வேளாண், மருத்துவம், பேலீஸ், வனம், புள்ளியல், பெதுப்பணி, நெடுஞ்சாலை, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் பயிற்சி அளித்தனர்.

இதில் கிராம பதிவேடுகளை பராமரிப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு நாளான நேற்று பயிற்சியில் கலந்து கெண்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை உதவி கலெக்டர் மஞ்சுளா, தாசில்தார் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்