களியக்காவிளை,
கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு மகா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் நந்தி மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகா தேவர் ஆலயத்தில் நந்தி மற்றும் மூலவரான மகா தேவருக்கு பால், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தூப, தீப ஆரத்தி தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.