தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவி ஏற்றவுடன் தலைமை செயலாளர், முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். வெ.இறையன்பு, புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார்.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பியாக இருந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ககன் தீப் சிங் பேடி வேளாண் துறை செயலாளராக இருந்து வந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்