தேனி அருகே பழனிசெட்டிபட்டி சுகதேவ் தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி சரஸ்வதி (வயது 70). இவர், டி.பி.என். சாலையில் பெட்டிக்கடை வைத்து வாழைப் பழங்கள் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 25-ந்தேதி மாலையில் இவர் தனது கடையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் சரஸ்வதியிடம் ரூ.500 கொடுத்து சில்லரை கேட்டார். உடனே சரஸ்வதி பக்கத்தில் உள்ள கடைக்கு சில்லரை வாங்கச் சென்றார். அப்போது மற்றொரு நபர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.