தமிழக செய்திகள்

டெங்கு பரவலை தடுக்க வேண்டும்

அருப்புக்கோட்டையில் டெங்கு பரவுவதை தடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் டெங்கு பரவுவதை தடுக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், என்ஜினீயர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

கவுன்சிலர் பாலசுப்பிரமணி:- வாரம் இரு முறை குப்பைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும்.

ஜெயகவிதா:- பழைய பஸ் நிலையம் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.

ஆக்கிரமிப்பு

ராமதிலகவதி:- டெங்கு அதிகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாபிராமர் கோவில் பின்புறம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை அகற்ற வேண்டும்.

அப்துல் ரகுமான்:- மதுரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

முருகானந்தம்:- பழுதாகி உள்ள குப்பை அள்ளும் மின் வாகனங்களை சரி செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை