தமிழக செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணி

ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணி

தினத்தந்தி

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மாலையாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைய இருக்கும் ரேஷன் கடை கட்டித்திற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பொதுநிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் அமைக்கும் பணி மற்றும் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். அப்போது அவர், மாலையாபுரம் மற்றும் மேலப்பாட்டகரிசல்குளம் பகுதி பொதுமக்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறினார். இதில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், துணை சேர்மன் துரைகற்பகராஜ், ஊர்த்தலைவர் பாண்டி, கிளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு