தமிழக செய்திகள்

தொடக்க பள்ளி புதிய கட்டிடம்-தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தொடக்க பள்ளி புதிய கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தினத்தந்தி

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்த மடப்புரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒரு பகுதி கட்டிடம் இடிந்து சேதமடைந்து இருந்தது. அங்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சத்தை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சபர்மதி பாலபோதகுரு தலைமை தாங்கினார். திருப்புவனம் பேரூராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் லதாதேவி, திருப்புவனம் யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், நகர் செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, மடப்புரம் மகேந்திரன், ஜெயக்கொடி, ஊராட்சி துணை தலைவர் காளீஸ்வரன், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன், நீலமேகம், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், ஒன்றிய மாணவரணி பாண்டிய கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொன்னழகு, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை கலையரசி நன்றி கூறினார். 

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி