சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.