தமிழக செய்திகள்

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி 15ம் தேதி தமிழகம் வருகை

நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

சென்னை,

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தென்னிந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார் பிரதமர் மோடி. அதன்படி 15ம் தேதி சேலத்திற்கும், 16ம் தேதி கன்னியாகுமரிக்கும், 18ம் தேதி கோவைக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பாக, பிரதமர் மோடி கடந்த 4ம் தேதி சென்னை வந்தார். அப்போது சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்