File Photo 
தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

புதுடெல்லி,

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துள்ளார். தமிழகத்தில் 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில நிதி நிலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பிரதமர் மோடி, முதல் அமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்