தமிழக செய்திகள்

தமிழ்நாட்டை கட்டுப்படுத்தலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார் - தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேச்சு

தமிழ்நாட்டை கட்டுப்படுத்தலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.

தினத்தந்தி

ஆலங்குளம்,

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆலங்குளத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆலங்குளம் பகுதி பீடித் தொழிலாளர்கள், விவசாயிகள் பகுதியாக உள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்புகளை சிறு தொழில்கள் வழங்கி வருகின்றன. சிறு தொழில்கள் தான் வேலைவாய்ப்பிற்கு முதுகெலும்பாக உள்ளது. அந்த முதுகெலும்பை நரேந்திர மோடி நசுக்கி அழித்து வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. பீடி தொழில் போன்ற சிறுதொழில்களை அழித்து வருகின்றன.

தமிழ் மொழி இந்திய மொழி இல்லையா, தமிழ் கலாச்சாரம் இல்லையா, தமிழ் வரலாறு இந்தியாவின் வரலாறு இல்லையா. ஆனால் மோடி ஒரே மொழி, கலாச்சாரம், மதம் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். தமிழ்நாட்டை கட்டுப்படுத்தலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக மக்களை பற்றி மோடி தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக மக்கள் நேர்மையான கலாச்சாரத்தைக் கொண்டவர்களாவர். தமிழ் மொழி, கலாச்சாரம், மக்களை மோடி பாராட்ட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களை மதிக்க வேண்டும். மத்திய அரசு மதிக்கும் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ஏழைகளையும், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அரவணைக்கும் ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு