தமிழக செய்திகள்

1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தை நாட்டுக்கு அற்பணித்தார் பிரதமர் மோடி

நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அற்பணித்தார்.

தினத்தந்தி

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் 7,800 கோடி ரூபாய் மதிப்பில் 1,000 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் நிலையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. மேலும் திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், துத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் 3,000 கோடி ரூபாய் மதிப்பில், 709 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை என்.எல்.சி. நிறுவனம் அமைத்துள்ளது.

இந்த புதிய மின்திட்டங்களை, கோயம்புத்துர் கொடிசியா வளாகத்தில் நடந்த அரசு விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக, நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசுகையில், நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் அத்தியாவசியமானது. என்.எல்.சி., நிறுவனத்தின் 2 பெரும் மின் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை