நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரிகளான டி.ஆர். பாலு, ஆ. ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.