தமிழக செய்திகள்

பரமத்திவேலூர் அருகேசிறுமி பலாத்காரம்; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

பரமத்திவேலூர் அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமி பலாத்காரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலூர் அருகே உள்ள கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 39). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பரமத்திவேலூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு வெள்ளையனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாரதி வாதாடி வந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று நேற்று வழங்கப்பட்டது.

20 ஆண்டுகள் சிறை

அதில் சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி வெள்ளையனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முனுசாமி தீர்ப்பளித்தார். பின்னர் போலீசார் வெள்ளையனை கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

இந்த வழக்கில் புலன் விசாரணையை சரிவர மேற்கொண்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை