தமிழக செய்திகள்

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை

சென்னை அண்ணா நகரில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கோயம்பேடு,

சென்னை அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அபுல்ஹாசன். தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார்.

அபுல்ஹாசன் நேற்று காலை வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு அண்ணாநகர் போலீசார் வந்து சோதனையிட்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்