தமிழக செய்திகள்

தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மயிலாடுதுறையில் தனியார் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் நூருல் ஹாலிக்(வயது 58). இவர் மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் கடையின் மாடியில் உள்ள மின்விசிறியில் நூருல் ஹாலிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் இறந்து போன நூருல் ஹாலிக் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து போன நூருல் ஹாலிக் நகை திருடியதாகவும், அதனால் கடையின் உரிமையாளர் நூருல் ஹாலிக்கை திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தசம்பவம் தொடர்பாக நூருல் ஹாலிக் மனைவி பரிதாக்கனி (52) கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து