தமிழக செய்திகள்

பெரம்பலூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

தினத்தந்தி

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பெரம்பலூர் ரோவர் கல்விக்குழுமம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் டயர் தொழிற்சாலை, விரைவில் தொடங்கப்படவுள்ள கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவைகளும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்க உள்ளார்கள். டிரைவர், தையல், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் ஆசிரியர் கல்வி தகுதியுடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் தங்களது ஆதார் எண், சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை