தமிழக செய்திகள்

தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சதீஷ், மாநில துணை பொதுச்செயலாளர் விஜயகுமார், துணைத்தலைவர் இன்பராஜ், சட்ட ஆலோசகர் ஜெயவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வாங்கி விட்டு தொடர் அங்கீகாரம் தராமல் அலைக்கழிக்கும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன் (தனியார் பள்ளிகள்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்கள் படிப்பதற்கான ஆர்.டி.இ. 2 ஆண்டுகள் கல்வி கட்டணப்பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆன்-லைன் அங்கீகாரத்தை முடக்கக் கூடாது. சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.