தமிழக செய்திகள்

வாழப்பாடி அருகே கார் மீது தனியார் மகளிர் கல்லூரி பஸ் மோதல் - ஒருவர் பலி

வாழப்பாடி அருகே கார் மீது தனியார் மகளிர் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தினத்தந்தி

வாழப்பாடி,

சென்னை தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது50). இவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரும், இவரது மனைவி சுபஸ்ரீ இருவரும், இவர்களின் மகளை, சென்னையில் இருந்து காரில் அழைத்துச் சென்று கோவை கல்லூரியில் விட்டுவிட்டு இன்று காலை, மீண்டும் சென்னை நோக்கி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.

வாழப்பாடி அருகே ஆத்துமேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற சேலம் அம்மாபேட்டை தனியார் மகளிர் கல்லூரி பஸ் கார் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த இவரது மனைவி சுபஸ்ரீயை மீட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள், சிகிச்சைக்காக, சேலம் அம்மாபேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை