தமிழக செய்திகள்

பிரியங்கா காந்தி பிறந்தநாள், பொங்கல் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்தநாள், பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா குறிஞ்சிநகரில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி மாநில பொதுசெயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருன கே.பெருமாள்சாமி தலைமை தாங்கி கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கட்சி தொண்டர்கள் 100 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் முத்துகுட்டி முன்னிலை வகித்தார்.

விழாவில் தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டி.டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டலதலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு மாநகர தலைவர் ஏ.ஜே.அருள்வளன், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்