தமிழக செய்திகள்

உத்தரபிரதேச முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்க வேண்டும் - சல்மான் குர்ஷித் விருப்பம்

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்க வேண்டும் என்று சல்மான் குர்ஷித் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பம். ஆனால், இறுதி முடிவை பிரியங்கா தான் எடுப்பார்.

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் 40 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்கு பிரியங்கா காந்தி வாய்ப்பு அளித்து உள்ளார். அவரது சுற்றுப்பயணமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தியால் பெரும் அரசியல் மாற்றம் நிகழ்வது உறுதி.

பஞ்சாபில் முதல்வர் மாற்றப்பட்டு இருந்தாலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றிபெறும். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனிக் கட்சி தொடங்கினால் அது பா.ஜ.க.வுக்கு தான் இழப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு