மன்னார்குடி;
மன்னார்குடியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்தல், தூய்மை தொடர்பான விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், ஆணையர் சென்னுகிருஷ்ணன, நகரசபை துணைத் தலைவர் கைலாசம், நகர்நல அலுவலர் டாக்டர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். முடிவில் சுகாதார ஆய்வாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.