தமிழக செய்திகள்

வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு

மாவட்ட அளவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஊட்டி

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி நீலகிரி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே கட்டுரை, பேச்சு பேட்டிகள் நடைபெற்றது. 6-ம் முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், 2-ம் இடம் ரூ.7 ஆயிரம், 3-ம் இடம் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதேபோல் அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2-ம் இடம் ரூ.3 ஆயிரம், 3-ம் இடம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சுப் போட்டிகளில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் பெற பிரிவு வாரியாக 22 மாணவர்கள் தகுதி பெற்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசுத்தொகை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் புவனேசுவரி உடனிருந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்