தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

விருதுநகரில் மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விருதுநகர் அருங்காட்சியகத்தின் சார்பில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கான சுதந்திர போராட்ட தியாகிகளின் மாறுவேடப்போட்டி விருதுநகால் நடைபெற்றது. இதில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. 3-ம் வகுப்பு வரையிலான போட்டியில் சவ்வாஸ்புரம் அரசு பள்ளி மாணவி கிருத்திகா முதல் பரிசினையும், கே.மடத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவி லாவண்யா 2-வது பரிசினையும், சிவகாசி விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவி ஆத்ரியா 3-வது பரிசினையும் பெற்றனர். 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் சவ்வாஸ்புரம் அரசு பள்ளி மாணவர் அஸ்வந்த் முதல் பரிசும், கே. மடத்துப்பட்டி அரசு பள்ளி மாணவி கனிஷ்கா 2-வது பரிசும், விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவர் அய்யனார் 3-வது பரிசும் பெற்றனர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான போட்டியில் சவ்வாஸ்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜோதிலட்சுமி முதல் பரிசும், மேலப்பருத்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி 2-வது பரிசும், ஆனைக்குட்டம் அரசு பள்ளி மாணவி ஐஸ்வர்யா 3-வது பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நாகர்கோவில் கல்லூரி பேராசிரியை தானம்மாள் பரிசுகளை வழங்கினார். இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்