தமிழக செய்திகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் நீராட தடை - மாவட்ட கலெக்டர் உத்தரவு

நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது.

தினத்தந்தி

சேலம்,

காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது.

இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுள்ள நிலையில், காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் பொதுமக்கள் நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்