புதுக்கோட்டை மாவட்டம் கழுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 30). இவர் சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தனது உறவினரான 22 வயது பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த பெண் பழனிச்சாமியுடன் பழகுவதை தவிர்த்தார். இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு கடந்த மாதம் வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி, அந்த பெண்ணுடன் தான் எடுத்து கொண்ட புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.