சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் அங்கு பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து விபசாரம் நடத்தியதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிலோபர்தி சுதாகர் (வயது 46), அவருடைய மனைவி இந்து (32) மற்றும் கிண்டியை சேர்ந்த சீனிவாசன் (25), ராஜ்குமார் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.