தமிழக செய்திகள்

திருமுல்லைவாயல் அருகே வீட்டில் விபசாரம்; பெண் தரகர் கைது

திருமுல்லைவாயல் அருகே வீட்டில் விபசாரம் நடத்திய பெண் தரகரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வீட்டில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருமுல்லைவாயல் சக்தி நகர் தொல்காப்பியர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அந்த வீட்டில் பெண்களை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக பெண் தரகரான அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்த 2 பெண்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து