சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரை சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது 66). இவர் அப்பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த பண்ணையில் கடந்த சில மாதங்களாக கோழிக்குஞ்சுகளை வளர்க்காததால் காலியாக கிடந்தது. இந்த நிலையில் அந்த கோழிப்பண்ணையில் விபசாரம் நடப்பதாக, சாம்பவர்வடகரை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவில் ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அந்த கோழிப்பண்ணைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோழிப்பண்ணை உரிமையாளரான செல்லப்பா மற்றும் அங்கிருந்த நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கும்பிளம்பாடு வேம்படி தெருவைச் சேர்ந்த ராமசங்கு மகன் செந்தில்குமார் (32) மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.