தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மாநில துணைப் பெதுச்செயலாளர் மங்களபாண்டியன் பங்கேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்பேது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தெகை ஆகியவற்றை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு பணியாளர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.