தமிழக செய்திகள்

திருச்செங்கோட்டில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

திருச்செங்கேடு:

திருச்செங்கோட்டில் அண்ணா சிலை முன் கரும்பு விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையானது கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பணம் முழுவதையும் வட்டியுடன் மற்றும் 5 ஏ விலை, மாநில அரசு அறிவித்த விலை, வாகன வாடகை, வெட்டு கூலியை தமிழக அரசு உடனே வழங்ககோரி போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் நல்லா கவுண்டர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பூபதி, வேலாயுதம் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து