தமிழக செய்திகள்

தர்மபுரியில்,அரசு பள்ளி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித்துறை தூய்மை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆஞ்சலா, மீனாட்சி, மாதம்மாள், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் மணி, துணை செயலாளர் நடராஜன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 16 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப்போல் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.,

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு