தமிழக செய்திகள்

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாயல்குடி, 

கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கல்லூரி வாயிலில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்கள் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் பணி அனுபவத்தை பின்பற்றவும் எழுத்து தேர்வு முறையை கைவிட வேண்டும். சட்டக் கல்லூரிக்கு வழங்கியதுபோல ரூ. 30 ஆயிரமாக ஊதிய உயர்வு, மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற கோரி கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.