தமிழக செய்திகள்

மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திசையன்விளை அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள கூட்டப்பனை மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தர அரசை வலியுறுத்தி நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குட்டம் பஞ்சாயத்து உறுப்பினர் அந்தோணி சேவியர் தலைமை தாங்கினார். மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜோன்ஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் அருணா டென்சிங் உள்பட மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.